சசிகலா கோரிக்கைகளை ஏற்ற ஆறுமுகசாமி கமிஷன்... 3 பேரின் விவரங்களை மட்டும் தர மறுப்பு!
சசிகலாவின் கோரிக்கைகளை ஆறுமுகசாமி கமிஷன் ஏற்றுக் கொண்டது.
Recommended Video

சென்னை: சசிகலா கோரியபடி அவருக்கு எதிராக புகார் கொடுத்தவர்களின் விவரங்களை அளிக்கவும், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் ஆறுமுகசாமி கமிஷன் ஏற்றுக் கொண்டது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

புகார் கொடுத்தது யார்
இந்நிலையில் 20-க்கும் மேற்பட்டவர்களை ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இதனிடையே சசிகலாவிடமும் விசாரணை நடத்த பெங்களூர் சிறைத் துறைக்கு சம்மன் அனுப்பியது. கமிஷனின் சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் தன் மீது புகார் கொடுத்தவர்கள் குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என்று சசிகலா தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் கோரிக்கை விடுத்தார்.

குறுக்கு விசாரணை
இந்த விவரங்களை பெற்ற 15 நாட்களுக்குள் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிப்பதாகவும் கமிஷன் முன்பு ஆஜராவதாகவும் சசிகலா தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து கமிஷன் விசாரிக்கும் நபர்களிடம் தங்கள் தரப்பும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.

வழக்கு முடிய காலதாமதம்
இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்துவிட்டதால் மீண்டும் குறுக்கு விசாரணை செய்வதானால் வழக்கு முடிய இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். இதற்கு மேல் விசாரணை நடத்தும் நபர்களிடம் வேண்டுமானால் சசி தரப்பு குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

3 பேரது விவரங்கள் தர மறுப்பு
இந்நிலையில் சசிகலாவின் இரு கோரிக்கைகளையும் ஆறுமுகசாமி கமிஷன் ஏற்றது. சிவக்குமார், பூங்குன்றன், பாலாஜி ஆகிய மூவரின் விவரங்கள் இன்னும் முழுமையாக பெறாததால் அவர்களது விவரங்களை கொடுக்க இயலாது என்று ஆறுமுகசாமி கமிஷன் மறுப்பு தெரிவித்துவிட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications