சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் வரும் மே 3-ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இதுதொடர்பாக சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் விவேக், கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3-ஆம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications