For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இன்று விசாரணை

தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இன்று விசாரணையை தொடங்குகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணை-வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் கொடூர துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    Aruna Jagadeesan Commission to start probe on Tuticorin Firing

    இச்சம்பவம் தொடர்பாக மாநில, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷனை அமைத்தது.

    இன்று இந்த ஆணையத்தின் விசாரணை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று தூத்துக்குடி வருகை தருகிறார்.

    தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் முதலில் ஆலோசனை நடத்திவிட்டு பின் விசாரணையை தொடங்குகிறார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடமும் அவர் விசாரணை நடத்த உள்ளார்.

    English summary
    TamilNadu Govt's Judge Aruna Jagadeesan Commission will start probe on Tuticorin Police Firing on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X