புரோக்கர்களை வைத்து ஆசை காட்டி எம்எல்ஏக்களை வளைக்கப் பார்க்கிறார்கள்...அருண்மொழித்தேவன் ஆதங்கம்!
தினகரன் தரப்பினர் அரசியல் புரோக்கர்களை வைத்து எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி வளைக்கப் பார்ப்பதாக அருண்மொழித்தேவன் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் : டிடிவி. தினகரன் தரப்பினர் அரசியல் புரோக்கர்களை வைத்து எம்எல்ஏக்களை வளைக்க ஆசை வார்த்தைகளை கூறி வருவதாக அருண்மொழித்தேவன் எம்பி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிர்வாகிகளை மாற்றி அதிரடி அறிவிப்புகளை டிடிவி. தினகரன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அருண்மொழித்தேவன் எம்பி, கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா என்று கூட தெரியாத நிலையில் இருக்கும் தினகரன் நிர்வாகிகளை எப்படி மாற்றுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அருண்மொழித்தேவன் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தால் அதிமுக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்ற இரண்டு அணிகளும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைந்துள்ளன. கட்சிக்கே தொடர்பு இல்லாத தினகரன் நிர்வாகிகளை எப்படி மாற்ற முடியும்.
எம்எல்ஏக்களை வளைப்பதற்காக அரசியல் புரோக்கர்களை வைத்து தினகரன் தரப்பு ஆசை காட்டி வருகிறது. அமைச்சர் பதவி கொடுப்பதாகக் கூறி எம்எல்ஏக்களை இழுத்து வருகின்றனர். இதன் விளைவாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு என்பது தற்பாது 21ல் வந்த நிற்கிறது. ஆனால் இனி என்ன ஆசை வார்த்தை சொன்னாலும் நடக்காது. நிச்சயம் 21 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை, என்று அருண்மொழித்தேவன் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications