ஆப்ரேஷன் பார்க்கிங் மனி என்றால் என்ன? திடுக்கிட வைக்கும் அருப்புகோட்டை வருமான வரி சோதனை
ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
Recommended Video

சென்னை: ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.
அருப்புக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிறுவனம் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிறது. அதில் நிறைய ஊழல் நடந்து இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடக்கிறது.

கோட் வேர்ட்
பொதுவாக வருமான வரித்துறை சோதனை செய்யும் போது, சோதனை நடத்தும் தலைமை அதிகாரிகளை விட வேறு யாருக்கும், எந்த இடத்தில் சோதனை நடத்தப்பட போகிறது என்று விவரம் தெரியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பாக ரகசியம் காக்கப்படும். அதேபோல் செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தவும் கோட் வேர்ட் ஒன்று பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக, ஆபரேஷன் பார்கிங் மனி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

காரணம் என்ன
இந்த வார்த்தையை தேர்வு செய்ததற்கு காரணம் இருக்கிறது. எஸ்பிகே குழுவில் கணக்கில் வராத பணம் எல்லாம் காரில் பதுக்கி வைக்கபட்டு இருக்கிறது என்றுதான் புகார் வந்தது. ரகசியமாக சிலர் இந்த தகவலை, வருமானவரித்துறைக்கு தெரிவித்து இருக்கிறார்கள். அதனால், இந்த ஆபரேஷனுக்கு ஆபரேஷன் பார்கிங் மனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. செய்யாதுரை வீடுகளில் பார்க் செய்யபட்ட கார்களை சோதனையிட அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்.

கண்டுபிடித்தனர்
இந்த நிலையில் திட்டமிட்டது போலவே கார்களில் அதிக அளவில் பணம் கிடைத்துள்ளது. செய்யாதுரையின் வீட்டில் இருக்கும் கார், பக்கத்துவீட்டில் இருக்கும் கார் என்று மொத்தமாக 10க்கும் அதிகமான கார்களில் இருந்து மட்டும் இதுவரை 80 கோடி பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 160 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

தப்பித்துள்ளது
இந்த நிலையில்தான் இந்த ஆபரேஷனின் குறிக்கோள் குறித்து தகவல் கசிந்து இருக்கிறது. கார்களை வருமானவரித்துறை அதிகாரிகள் குறிவைப்பது செய்யாதுரை குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது. இதனால் 20க்கும் அதிகமான கார்கள் அந்த வீட்டை விட்டு ஏற்கனவே வெளியே கொண்டு செல்லபட்டு இருக்கிறது. இதில் பலகோடி ரூபாய் பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தகவல் வேண்டும்
இந்த கார்கள் சென்னையில் உள்ள சில கார் பார்க்கிங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்கு, இந்த வருமான வரி பிரச்சனை முடியும் வரை இந்த கார்கள் வெளியே வராது என்றும் கூறப்படுகிறது. இந்த கார்கள் குறித்து தகவல் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications