அமைதிப் போராட்டம் வெல்லும்.. ஜல்லிக்கட்டு புரட்சி இளைஞர்களுக்கு அஸ்வின் வாழ்த்து!

அமைதியான முறையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெல்லும என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைதியான முறையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெல்லும். பிரச்சினை தீரும் என்று சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்தியுள்ளார்.

Ashwin pats Jallikattu youngsters

ஜல்லிக்கட்டு போராட்டம் நாடு முழுவதும் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. அரபு வசந்தம் வரிசையில் தனி வரலாறு படைத்து விட்டது தமிழகத்து இளைஞர் படை எழுச்சியுடன் நடத்தி வரும் இந்த புரட்சி.

இந்த புரட்சிப் போர் குறித்து அஸ்வினும் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஒற்றுமை, அமைதி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவும். சரியான கோணத்தில் இது போய்க் கொண்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.

இதற்கு வீரேந்திர ஷேவாக் பின்னாடியே வந்து வாழ்த்தியுள்ளார். அவர் போட்டுள்ள பதில் டிவீட்டில் Ash-win என்று தனது ஸ்டைலில் போராட்டம் வெல்லும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் நடந்து வரும் புரட்சிப் போராட்ட எழுச்சி குறித்து ஷேவாக் வியப்பு தெரிவித்துப் பாராட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+