அரக்கோணத்தில் சிக்கிய அஸ்ஸாம் நபர் தீவிரவாதி அல்ல- இரிடியம் கும்பலிடம் ஏமாந்தவர்- போலீசார் தகவல்
வேலூர்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் 5 கிலோ பாஸ்பரஸுடன் பிடிபட்ட அஸ்ஸாம் நபர் தீவிரவாதி அல்ல என்றும் இரிடியம் இருப்பதாக கூறி ஏமாற்றும் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட நபர் அவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரக்கோணம் ரயில் நிலையத்தின் 2வது நடைமேடை அருகே மேம்பாலத்தில் ஏறும் படிக்கட்டுகளில் நேற்று மாலை 5.45 மணியளவில் சந்தேகப்படும்படி வேகமாகச் சென்ற நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் 5 கிலோ பாஸ்பரஸ் மற்றும் மேலும் சில பொருட்கள் இருந்தது கண்டு போலீஸார் திடுக்கிட்டனர்.
இதைத் தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் துருவி துருவி விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது பிடிபட்ட நபரின் பெயர் மெகிபல்லா என்றும் அஸ்ஸாமை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் ராஜிவ், இஸ்மாயில், டேவிட் ஆகிய 3 பேருடன் இணையம் மூலமாக மெகிபல்லாவுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த 3 பேரும் இரிடியம் தயாரிக்கும் மூலப் பொருட்களை தருகிறோம் என்று கூறி மெகிபல்லாவை ஏமாற்றி அரக்கோணத்துக்கு வரவழைத்திருக்கின்றனர். அங்கு பாஸ்பரஸ் மற்றும் சில பொருட்களை கொடுத்து மெகிபல்லாவை ஏமாற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ராஜிவ். இஸ்மாயில், டேவிட் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எண்ணூரில் மர்ம நபர் கைது
இதனிடையே சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய நபர் ஒருவரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவன் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவன் எதற்காக தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவன் கடல்வழியே நீந்தி துறறமுகத்துக்குள் ஊடுருவியதாகவும் தெரியவந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications