தமிழ்நாடு மீண்டும் அம்மா நாடு?: தேர்தல் முடிவு யாருக்கு சாதகம்?
சென்னை: இன்றைய சட்டசபை தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக வருமோ என்ற பதைபதைப்பிலேயே விடிந்திருக்கிறது. மக்களின் தீர்ப்பு ஆளுங்கட்சிக்கா?, திமுகவிற்காக அல்லது மாற்றம் வேண்டும் என்று கூறியவர்களுக்கா? என்பதுதான் அனைவரின் முன் நிற்கும் கேள்வி. மக்கள் மாற்றத்தை விரும்பியிருந்தால் திமுக ஆட்சியமைக்கும் இல்லை எனில் தமிழகம் மீண்டும் அதிமுகவின் வசமே இருக்கும்.
சட்டசபை தேர்தலில் தப்பித் தவறி அதிமுக ஜெயித்துவிட்டால் 110-வது விதியின் கீழ் தமிழ்நாடு இனி "அம்மா நாடு" என பெயர் மாற்றத்தை ஜெயலலிதா அறிவித்துவிடுவார் என திமுக தலைவர் கடந்த சில தினங்களுக்கு முன்பே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் திமுக தலைவர் கருணாநிதியின் கார் பழுதடைய அவர் தண்ணீருக்கும், உணவுக்கு, மருந்து மாத்திரைக்கும் பட்ட பாட்டினை வைத்து காமெடி என்ன பாடுபடுகிறார் என்பதை வைத்து காமெடி கார்ட்டூன் தயாரித்து யுடுயூப்பில் போட்டு லட்சம் பேரை பார்க்க வைத்து வைரலாக்கியது இந்தியா டுடே.
இதை பார்த்த பயத்தில்தான்தான் அடுத்த 5 ஆண்டுகள் ஜெயலலிதா கையில் ஆட்சியை கொடுத்தால் 'அம்மா நாடு' என்று ஜெயலலிதா அறிவித்தாலும் அறிவித்து விடுவார் என்ற ஒருவித அச்ச உணர்வுடனேயே தேர்தலுக்கு முதல்நாள் அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி.
தமிழக தலையெழுத்து
தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுக்கான தலையெழுத்தை கடந்த 16ம் தேதி தமிழக மக்கள் எழுதியிருக்கிறார்கள். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு முடிந்தவுடன், மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
போட்டி பலம்
இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமகா, பாஜக, நாம் தமிழர் என பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி, தனி அணி அமைத்து போட்டியிட்டாலும், வழக்கம்போல் அதிமுக மற்றும் திமுக இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்பு
இதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு சமூக அமைப்புகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில், சிலவற்றில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் எனவும், சிலவற்றில் தி.மு.க ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தூக்கம் தொலைத்தவர்கள்
இதனால், அதிமுக, திமுக தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய பதற்றம் காணப்படுகிறது. விடிய விடிய உறங்காமல் யாகம் செய்தவர்கள் எத்தனை பேரோ? இலை துளிர்த்து மீண்டும் அம்மா நாடாகா தொடருமா? அல்லது சூரியன் உதிக்குமா? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பெரும்பான்மை பெற்று தமிழகத்தை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications