தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவுதான்: கருணாநிதி
சென்னை: 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதுபற்றி அனைத்து கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஞாயிறன்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் :
கேள்வி:- 4 மாநில தேர்தல் முடிவுகளைப்பற்றி...!
பதில்:- அந்த மாநிலங்களில்-இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.
கேள்வி:- இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?.
பதில்:- யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான்.
கேள்வி:- ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அதற்குப்பிறகும் கணிசமான வாக்குகள் தி.மு.க.விற்கு கிடைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களை கண்டு கொள்ளவில்லையே!.
பதில்:- தேர்தல் ஆணையம் முதல்வரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கண்டனம் தெரிவித்திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கேள்வி:- ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களை பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறது...!
பதில்:- ஆளுங்கட்சியின் அராஜகங்களை தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது!.
இவ்வாறு கருணாநிதி கூறினார்












Click it and Unblock the Notifications