சொத்துக்குவிப்பு வழக்கு.. மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு ஜெயில்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி
மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறைதண்டனை சிபிஐ வழங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: மத்திய அரசு அதிகாரி ஒருவர், தன் வருமானத்துக்கும் அதிகமான சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 4 ஆண்டு கால சிறை தண்டனையை சிபிஐ வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் முத்துக்குமாரசாமி. இவர், அந்த அலுவலகத்தில் தணிக்கை துறையில் கண்காணிப்பாளராக உள்ளார்..

1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாம் பணியில் இருந்த காலத்தில் தன்னுடைய வருமானத்துக்கும் அதிகமாக அதிகமாக 40 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை சொத்துகள் வாங்கி குவித்ததாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்தது. முறைகேடாக வாங்கிய இந்த சொத்துக்களை குவிக்க அவரது மனைவி கிருஷ்ணாபாயும் உடந்தையாக இருந்ததாக கூறி அவர் மீதும் சிபிஐ வழக்கு தொடுத்தது.
இதன் மீதான வழக்கினை நீதிபதி வசந்தி நடத்தி வந்தார். வழக்கு விசாரணை சென்னையின் 14-வது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முத்துக்குமாரசாமி, மற்றும் அவரது மனைவிக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.
அத்துடன், கணவன்-மனைவி இருவரும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வேண்டும் என ஆணையிட்டார். இந்த தகவலை சிபிஐ அலுவலகம் வெளியிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications