சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் ரூ.3 கோடி உண்டியல் காணிக்கை, நகைகள் ஒப்படைப்பு!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களிடம் தமிழகஅரசு இந்து அறநிலையத்துறையினர் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் உண்டியல் நன்கொடை தொகை ரூ.3 கோடி 15 லட்சம் ஆகியவற்றை திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
நடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ந் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ந் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது.
Assets handed over to Dikshitars - The Hindu http://t.co/pByI8fobBg!!
— Subramanian Swamy (@Swamy39) October 29, 2014 அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதுவரை 23 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் 1 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 99 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுதீட்சிதர்கள் தொடுத்த வழக்கில் கடந்த ஜனவரி 6-ந் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என தீர்ப்பளித்தை அடுத்து கோயில் முழு நிர்வாகத்தையும் பொதுதீட்சிதர்கள் ஏற்றனர்.
இதனையடுத்து கோயிலுக்குள் இந்து அறநிலையத்துறையினரால் வைக்கப்பட்டிருந்த 9 உண்டியல்கள் மற்றும் பிரசாதக் கடைகளை அகற்றி அத்தொகையினை பொதுதீட்சிதர்களிடம் வழங்குவது என செப்.19-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு அக்.1 மற்றும் அக்.7-ந் தேதி உண்டியல்கள் அகற்றப்பட்டன.
இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.முருகன், நகை சரிபார்க்கும் அதிகாரி கஜேந்திரன் ஆகியோர் திங்கள்கிழமையன்று பொதுதீட்சிதர்களின் செயலாளர் பாஸ்கர தீட்சிதரிடம் உண்டியல் காணிக்கை மற்றும் பிரசாதக்கடைகள் மூலம் வந்த தொகை உள்ளிட்ட மொத்தம் ரூ.3 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 537, திருப்பணி நன்கொடை ரூ.15 லட்சத்து 35 ஆயிரம் தொகையையும், 332 கிராம் தங்கம், 1458 கிராம் வெள்ளி, இரு வைரக்கற்கள் ஆகியவற்றையும் ஒப்படைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications