அமைச்சர்கள் ஏன் வருண ஜெபம் நடத்துகிறார்கள் தெரியுமா.. இந்தக் கூத்தைக் கேளுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வரும் போது அந்த தண்ணீரை சரியாக பயன்படுத்த நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல், இப்போது தண்ணீரில்லாமல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆங்காங்கே வருணஜபம் நடத்தி வருகின்றனர். இதுவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவர் சொன்னதன் பேரில்தான் நடத்தப்படுகிறதாம்.

மழைக்காக யாகம் நடத்தச் சொல்லுங்க. ஊரெல்லாம் மழை பெய்யும். உங்க ஆட்சி சுபீட்சமா இருக்கும் என்று அந்த ஜோதிடர் ஆலோசனை சொன்னாராம் அதை கேட்ட பின்னரே அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாடு முழுக்க இப்போது பெரிய பிரச்னையாக இருப்பதே வறட்சிதான். குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லாமல் பல ஊர்களில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியில் இருந்த போது கூட மழை பெய்தது. தண்ணீர் பிரச்சினை இந்த அளவிற்கு இல்லை. இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பதவியேற்று 3 மாதங்கள் ஆகியும் சென்னையில் மழையை காணோம். தலைநகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

இது நம்ம ஆட்சிக்குத்தான் கெட்டப் பெயரை உண்டாக்கும். எல்லோருக்கும் நம்மால் உடனடியாகத் தண்ணீர் கொடுக்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான். அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க நம்மால் முடியாது. அதுக்கு மழை பெய்தால் மட்டுமே சாத்தியம் என்று அமைச்சர்களிடம் பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டப்பட்ட ஜோதிடர் ஒருவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கிறார். அவர் கடந்த வாரம் சென்னைக்கு வந்து முதல்வரைச் சந்தித்திருக்கிறார். அப்போது வறட்சி, குடிநீர் பிரச்சினை

ஜோதிடர் ஆலோசனை

ஜோதிடர் ஆலோசனை

மழைக்காக யாகம் நடத்தச் சொல்லுங்க. ஊரெல்லாம் மழை பெய்யும். உங்க ஆட்சி சுபீட்சமா இருக்கும் என்று கூறினாராம். அதுமட்டுமல்லாமல், ‘வருண வேள்வி, வருண காயத்ரி வேள்வி, வருண சூக்த பாராயணம் என மூன்றையும் ஒன்றாக சேர்த்து நடத்தச் சொல்லுங்க.

மேகவர்ஷினி யாகம்

மேகவர்ஷினி யாகம்

இந்த யாகம் நடக்கும்போது, மேகவர்ஷினி ராகத்தில் நாகசுரம் வாசிக்கச் சொல்லுங்க என்றும் அவர் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு அவரை அங்கேயே வைத்துக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர் ராமச்சந்திரனை அழைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னிடம் சொன்னதை எல்லாம் அவரிடமும் சொல்லச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.

களை கட்டிய கோவில்கள்

களை கட்டிய கோவில்கள்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் யாரும் கோவில் பக்கம் அதிகமாக செல்லவில்லை. இப்போது மீதும் அரசியல் கட்சியினர் யாகம், வருண ஜெபம் என்று கிளம்பியிருப்பதால் கோவில்கள் மீண்டும் களைகட்டியுள்ளன.

வருண பகவான் மனது வைப்பாரா?

வருண பகவான் மனது வைப்பாரா?

இதனையடுத்தே தமிழகம் முழுவதும் மழை வேண்டி யாகம் நடத்தும் வேலையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் தொடங்கி இருக்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோயில், கோயிலாகச் சென்று மழைக்காக யாகம் நடத்துகிறார்கள். வருணபகவான் மனது வைப்பாரா பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An Astrologer from Athur, near Salem has advised CM Edappadi Palanisamy to conduct Varuna Jabam for rains.
Please Wait while comments are loading...