பொட்டு சுரேஷ் கொலை.. நாளையுடன் ஓராண்டு நிறைவு.. அட்டாக் பாண்டி இன்னும் தலைமறைவு

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ். திமுக தலைமக் குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். உடனடியாக அட்டாக் பாண்டி தலைமறைவாகி விட்டார். அட்டாக் பாண்டியும் அழகிரி ஆதரவாளர்தான்.
இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பாண்டி மட்டும் இதுவரை சிக்கவே இல்லை. அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது சொத்துக்களை முடக்கக் கோரி கடந்த டிசம்பர் 11ம் தேதி மதுரை கோர்ட்டில் போலீஸார் மனு செய்தனர். இதையடுத்து 2014 ஜனவரி 22-ந் தேதிக்குள் அட்டாக் பாண்டி போலீசில் சரண் அடைய விட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் பாண்டி ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோர்ட் முறைப்படி உத்தரவிட்டதும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications