ஷேர் ஆட்டோவில் மாணவியை கடத்த முயற்சி... 2 பேருக்கு போலீஸார் வலைவீச்சு
சென்னை: சென்னையில் ஷேர் ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் மீர்பகது (35). இவரது மகள் ஷமீரா(14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷமீரா புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல பள்ளி செல்வதற்காக தண்டையார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் ஷமீரா காத்திருந்தார். பஸ் வராததால், அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறினார். சோனியாவுடன் அந்த ஆட்டோவில் ஒரு ஆண், ஒரு பெண் இருந்துள்ளனர். அந்த பெண் சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் இறங்கிவிட்டார். பின்னர் சோனியாவும் இரு இளைஞரும் மட்டுமே அந்த ஆட்டோவில் பயணித்துள்ளனர்.

இதனிடையே ஆட்டோ வேறு வழக்கமாக வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்த சோனியா சத்தம்போட்டுள்ளார். இதன்காரணமாக அருகில் இருந்த இளைஞர் சோனியாவின் வாயை பொத்தவே, ஆட்டோ விரைவாக சென்றது. தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனை அருகே ஆட்டோ வந்த போது டிராபிக்கில் சிக்கியது. இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகள் மாணவியை பார்த்ததும், இளைஞர் அந்த மாணவியை விடுவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரை அடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications