நடிகைகள் பொம்மைகளுக்கு இங்கு இடமில்லை.. ஜல்லிக்கட்டு அலங்கரிக்கும் ஜவுளிக்கடை!
பட்டுக்கோட்டையில் உள்ள மங்களம் ஜவுளிக்கடை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாடுபிடி வீரர் ஒருவர் காளையை அடக்குவது போன்ற பொம்மையை வைத்துள்ளனர். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தஞ்சை : பட்டுக்கோட்டையில் உள்ள மங்களம் ஜவுளிக்கடை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாடுபிடி வீரர் ஒருவர் காளையை அடக்குவது போன்ற பொம்மையை வைத்துள்ளனர். பல துணிக்கடைகள் வியாபாரத்திற்காக நடிகைகளின் படங்களை வைதிருக்கும் நிலையில் மங்களம் துணிக்கடையில் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பொம்மை வாடிக்கையைளர்களை கவர்ந்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மங்களம் துணிக்கடை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீறிவரும் காளையை மாடுபிடி வீரர் ஒருவர்அடக்குவது போன்ற பொம்மையை வைத்துள்ளனர். வியாபாரத்திற்காக துணிக்கடைகள் நடிகைகளை அலங்கரித்து கடை முழுவதும் விளம்பர பலகைகளை வைத்து வரும் நிலையில் மங்களம் துணிக்கடை ஜல்லிக்கட்டை அலங்கரித்திருப்பது கடைக்கும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பாயும் காளைக்கு மேலே விவசாயத்தை போற்றும் வகையில் உழவே எங்கள் வாழ்வு என்ற வாசம் அடங்கிய விளம்பர பலகையையும் அவர்கள் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த புகைப்படத்தைப் பார்த்து மங்களம் துணிக்கடைக்குநெட்டிசன்கள் சபாஷ் தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications