அமைச்சர் ஜெயக்குமார் தெருப்பேச்சு பேசியிருக்கிறார்.. விடாமல் விளாசும் குருமூர்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குருமூர்த்திக்குதான் ஆண்மையில்லை- ஜெயக்குமார்- வீடியோ

  சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தன் பேச்சின் அர்த்தம் புரியாமல் தெருப்பேச்சு பேசியிருப்பதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  தினகரன் ஆதரவாளர்களை 6 மாதம் கழித்து நீக்கியிருப்பது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவத்தார். மேலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆண்மையைற்றவர்கள் என விமர்சித்திருந்தார்.

  இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குருமூர்த்தியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் எழுந்தது.

  அவர்கள்தான் இப்படி பேசுவார்கள்

  அவர்கள்தான் இப்படி பேசுவார்கள்

  குருமூர்த்தியின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆண்மையற்றவர்கள்தான் இதுபோன்று பேசுவார்கள் என்றும் அவர் கூறினார்.

  காங்கேயம் காளை போன்று

  காங்கேயம் காளை போன்று

  அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்; எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தார்.

  படித்த முட்டாள்

  படித்த முட்டாள்

  மேலும் குருமூர்த்திக்கு நாவடக்கமும் நிதானமும் தேவை என்றும் அவர் எச்சரித்தார். ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என்றும் ஜெயக்குமார் சாடினார்.

  புரியாமல் பேசியிருக்கிறார்

  புரியாமல் பேசியிருக்கிறார்

  இந்நிலையில் தான் பேசியது குறித்து குருமூர்த்தி டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில் தான் பேசியதன் அர்த்தம் புரியாமல் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை அவதூறாக பேசியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

  தெருப்பேச்சு பேசியுள்ளார்

  மேலும் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பற்றி தெருப்பேச்சு பேசியுள்ளார் என்றும் குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரின் தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் ஈடுபட்டால்தான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Auditor Gurumoorthy has reacted to Minister Jayakumar condemns. He says that minister did not understand the meaning of the speech and defamed me.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X