காதலியை திருமணம் செய்வதாக போலீசில் ஒப்புக் கொண்டுவிட்டு தற்கொலை செய்த ஆட்டோ டிரைவர்!
சேலம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக போலீசாரிடம் ஒத்துக் கொண்டு எழுதி கொடுத்துவிட்டு வந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு வந்த பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் மோட்டூரைச் சேர்ந்தவர் 19 வயதான பிரியா. நாமக்கல் மாவட்டம் ஒண்டிக்கடையைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே, இரு வீட்டாருக்கும் காதல் விஷயம் தெரிய வர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு குடும்பத்தினரும் வேறு வேறு சமுதாயம் என்பதால் எதிர்ப்பு மிகத் தீவிரமாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன முருகன் காதலி பிரியாவை விட்டு பிரிந்துவிட்டார்.
தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத பிரியா, வாழப்பாடி போலீசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியில், முருகன் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக, கடந்த 29ம் தேதி போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், ஒண்டிக்கடையில் உள்ள விவசாயத் தோட்டத்துக்கு சென்ற முருகன், அங்கே விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
இதனையடுத்து, மோதல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீசார், மாவட்ட எல்லை பகுதியான மோட்டூர் மற்றும் ஒண்டிக்கடை பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications