மைனர் மகள் காதல் திருமணம்.. மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை: காதலன் கைது
சென்னை: 10ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் தனது 23வயது காதலனை மணந்த துக்கத்தில் மனமுடைந்த சென்னை ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை முகப்பேர் கிழக்கு கலெக்டர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி (46). இவரது 15 வயது மகள் தற்போது 10 வகுப்பு படித்து வருகிறார். ரவியின் மகளுக்கும், அயப்பாக்கத்தைச் சேர்ந்த சுகுமார் (23) என்ற இளைஞருக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 14ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, சுகுமாரை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப் படுகிறது. மகளைக் காணவில்லை என போலீசில் புகார் தெரிவித்திருந்த ரவி, 3 நாட்கள் கழித்து திருமண கோலத்தில் வீடு திரும்பிய மகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
சிறுமி பெற்றோரைச் சமாதானப் படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது. படிக்கும் வயதில் காதல், திருமணம் என தன் வாழ்வைக் கெடுத்துக் கொண்டாலே என வேதனையில் ரவி உறவினர்களிடம் புலம்பியுள்ளார்.
மகளின் திடீர் திருமணத்தால் மன உளைச்சலில் சிக்கித் தவித்த ரவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஜெ.ஜெ.நகர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, ரவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஆள் கடத்தல், மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் சுகுமார் மற்றும் அவரது சித்தப்பா மூர்த்தி ஆகியோரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளானர்.
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சிறுமி தற்போது கோர்ட் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications