சென்னையில் ஆட்டோ கட்டணத்தை குறைத்தால் போராட்டம்.. தொழிற்சங்கங்கள் திட்டம்
சென்னை: சென்னையில், ஆட்டோ கட்டணத்தை குறைத்தால், போராட்டம் நடத்தப்படும் என்று ஆட்டோ தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25ம் அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் வசூலிக்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது.

இந் நிலையில் எரிபொருள் கட்டணக்குறைவையடுத்து ஆட்டோ கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணை சமீபத்தில், சென்னை ஹைகோர்ட்டில் வந்தது.
அப்போது, தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில், குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.1 குறைக்க உத்தரவிடப்படும் என்று, தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 1ம் தேதி முதல், இந்த புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆட்டோ கட்டணத்தை குறைத்தால் அதை எதிர்த்து போராடுவோம் என்று ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சேஷ சாயினம் இதுபற்றி கூறியதாவது:
1995 முதல் 2006 வரை 11 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை 13 முறை உயர்ந்தபோது ஆட்டோ கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை. பலமுறை போராட்டம் நடத்திய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.
2006ல் கட்டண உயர்வு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2013ல் புதிய ஆட்டோ கட்டணத்தை இந்த அரசு நிர்ணயம் செய்தது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும். இதற்காக முத்தரப்பு கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதையும் செய்யவில்லை. ஜி.பி.ஆர்.எஸ். கருவி தருவதாக கூறினார்கள் அதையும் வழங்கவில்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் மட்டும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். உயர்ந்த போது ஏன் கட்டணத்தை கூட்டவில்லை. கட்டணத்தை குறைக்க கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எரிபொருள் தவிர மற்ற பொருட்கள் விலை உயர்வாக உள்ளது. ஆட்டோ கட்டணத்தை குறைக்க கூறுவது போல பஸ், ரயில் கட்டணத்தை குறைக்க கூறுவார்களா?
மீட்டர் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தப்பில்லை. ஆனால் கட்டணத்தை குறைக்க கூறினால் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு, விடுதலை சிறுத்தை, ஐ.என். டி.யு.சி., பாட்டாளி உள்பட அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் குதிப்போம். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் 72 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அரசு கட்டணம் நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications