கருணாநிதி ஓய்வில் இருக்கிறார்... பார்க்க வருவதை திமுகவினர் தவிர்க்க வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்து வருவதால் திமுகவினர் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வீடு திரும்பியுள்ளார். அவர் ஓய்வெடுத்து வருவதால் திமுகவினர் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி, நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் நலமின்றி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் பெற்று நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதி முழு ஓய்வு எடுத்து வருவதால் அவரை சந்திக்க திமுகவினர் வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், நேற்றைய தினம் (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும், தலைவர் கலைஞர் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை "நோய்த்தொற்று"க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே, கலைஞரைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் ஒத்துழைக்க வேண்டுமென்று அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications