For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஹா.. சபாஷ்.. பலே.. ஈரோடு மாநகராட்சிக்கு ஒரு பெரிய 'ஓ' போடுங்க!

பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த பலகை ஈரோடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஈரோடு: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பலகை ஒன்று, ஈரோடு மாவட்ட மக்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நம் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை பலமுறை, பல வகைகளில் சொல்லி கொண்டே இருக்கிறோம். ஆனாலும் இந்த பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

விலை குறைவு

விலை குறைவு

எல்லோராலும் ஈஸியா பயன்படுத்தக் கூடியதாக இந்த பிளாஸ்டிக் இருப்பதாலும், பிடித்து கொள்ள வசதியாக இருப்பதாலும், விலை ரொம்ப கம்மி என்பதாலும், மக்கள் அதிலேயே திரும்ப திரும்ப விழுகின்றனர். ஆனால் பிளாஸ்டிக் ஒழிப்பை சில இடங்கள் மற்றும் சந்தைகளில் கடைகாரர்களே கடைபிடித்து நல்ல விஷயத்துக்கு துணையாக வந்துகொண்டிருக்கிறார்கள். எனினும் அரசு பிளாஸ்டிக்கை ஒழிக்க பல வழிகளில் கையாளும் தன் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியே வருகிறது.

மாநகராட்சியின் ஐடியா

மாநகராட்சியின் ஐடியா

அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. அதன்படி துண்டு பிரசுரங்களை விநியோகித்தோ, போஸ்டர்களை நகரெங்கும் ஒட்டியோ, இந்த பிரச்சாரம் நடைபெறவில்லை. ஈரோடு பஸ் நிலையத்திலேயே மாநகராட்சி சார்பில் ஒரு பெரிய விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகை யார் கண்ணிலும் படாமல் இருக்கவே முடியாது. அப்படி ஒரு செட்டப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பாரம்பரிய மாற்று பொருட்கள்

பாரம்பரிய மாற்று பொருட்கள்

நமக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் வகைகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது ஒருபுறமும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக நமது பாரம்பரியம் மிக்க பொருட்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது மற்றொருபுறமும் பிரித்து தரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கேரி பேக்குகள் ஒருபுறம் என்றால் அதன் எதிர்புறம் அதற்கு மாற்றான துணி பை, சணல் பைகளின் படங்கள் போடப்பட்டும் அதன்மேல் எழுதப்பட்டும் உள்ளது. அதேபோல, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர், கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரிஜினல் பொருட்களே

ஒரிஜினல் பொருட்களே

அதற்கு எதிர்புறம் வாழை இலை, தாமரை இலை மற்றும் உலோக பாத்திரங்கள் கொடுக்கப்பட்டு, எழுதப்பட்டும் உள்ளது. இன்னும் இதுபோல் மேலும் சில உதாரணங்கள் அந்த பலகையில் இடம் பெற்றுள்ளன. மேட்டர் என்னன்னா, இதில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒரிஜினல் பொருட்களையே ஒட்டி வைத்துள்ளனர். அதாவது நிஜமான வாழை இலை, நிஜமான தெர்மகோல் தட்டுகள், நிஜமான கேரி பாக் என ஒரிஜினல் பொருட்களையே ஒட்டி வைததுள்ளனர்.

எளிமை, அருமை

எளிமை, அருமை

கிட்டத்தட்ட இதை பார்த்தால் பள்ளி குழந்தைகளுக்கு படம் வரைந்து பாடம் நடத்துவதைபோல் உள்ளது. இருந்தாலும் எளிமையாகவும், கவரும்விதமாகவும், புரியும்படியாகவும், இந்த பெயர்ப்பலகையை வைத்த ஈரோடு மாநகராட்சிக்கு நமது பாராட்டுக்கள்!

English summary
Awareness about plastic wastage in Erode Dist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X