மக்கள் ஏழைகளாக இருப்பதையே ஜெயலலிதா, கருணாநிதி விரும்புகின்றனர்: விஜயகாந்த் பேச்சு
பல்லடம்: மக்களை வறுமையில் வைத்திருந்தால் தான் ஜெயலலிதா, கருணாநிதியால் ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்க முடியும். எனவே மக்களை முன்னேற விடமாட்டார்கள். என்று தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
திருப்பூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பல்லடத்தில் மக்களுக்காக மக்கள் பணி திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி டாக்டர்களுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: என் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நான் அதனை சந்திப்பேன். நாட்டு மக்களை நான் அதிகம் நேசிப்பவன். மக்களை வறுமையில் வைத்திருந்தால் தான் ஜெயலலிதா, கருணாநிதியால் ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்க முடியும். எனவே மக்களை முன்னேற விடமாட்டார்கள்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்குமாறு கூறிய எங்க கட்சிக்காரங்க இப்போ வருத்தப்படுகிறார்கள். நான் யாருக்கும் பணியமாட்டேன். அதிமுகவுக்கு, மாற்று திமுக தான் என்று ஸ்டாலின் ஊர் ஊராக போய் சொல்கிறார். வருகிற தேர்தலில் கூட்டணி இன்றி கட்சிகள் தனித்து போட்டியிட அவர் தயாரா? அப்போது தானே கட்சிகளின் உண்மையான பலம் தெரியும். தேர்தல் மே மாதம் தான் நடக்கப்போகிறது. கூட்டணி பற்றி பேச இன்னும் காலம் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தேமுதிக ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications