அயிரை மீன் ஒரு கிலோ ஜஸ்ட் 1500 ரூபாய்தான்!.. அதற்கும் கடும் போட்டிதான்!!
மதுரை: கெடா கறி வருவல்... நாட்டு கோழி குழம்பு... நல்லி எலும்பு சூப் என் என மாமனார் வீட்டில் வகை வகையாகச் சமைத்து போட்டாலும் புத்தம் புதிதாய் பிடிக்கப்பட்ட அயிரை மீனில் குழம்பு வைத்து சாப்பிடா விட்டால் மதுரைக்கு மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்து என்ன பிரயோஜனம் என்று கேட்பார்கள் வெளியூர் மாப்பிள்ளைகள்.
அயிரை மீன்களை வாய்க்கால் மற்றும் வயல்களிலும், கண்மாய்கள், நீரோடைகளில் மட்டுமே காண முடியும். நெல் அறுவடைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் மட்டும் இவை இருக்கும். அந்த மாதங்களில் மட்டுமே, அயிரை மீன் விற்பனைக்கும் வரும். குறைவான வரத்தின் காரணமாக, அயிரை மீனுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். அயிரை மீன் குழம்புக்கு தனி ருசி உண்டு. இந்த ருசிக்கு அடிமையாகாதவர்கள் குறைவுதான்.
மகளை கட்டிய மாப்பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே மீன்கடைகளில் அயிரையை தேடி அலைவார்கள் மாமனார்கள். வால மீனு இருக்குன்றான்... வஞ்சிரம் இருக்குன்றன்... அயிரை மட்டும் இல்லைங்கிறான்... குளத்திலேயே இல்லையாம் என்று பஞ்ச் வைத்தார் மாமனார்.

மதுரை மீன் சந்தையில் அயிரை
ஆறு குளமெல்லாம் நிரம்பி இருக்கே அயிரை மீனுக்கா பஞ்சம் என்று கேட்டால் ... அயிரை கிடைப்பது சிக்கல்தான் என்றார்கள் மீன்கடை வைத்துள்ள நண்பர்கள். ஆனாலும் அசரதா மாப்பிள்ளைகளோ வண்டியை எடு அப்படியே தெற்குவாசல் சந்தைக்குப் போயி ஒரு ரவுண்ட் அடிப்போம் என்று சொல்லி ரிங் ரோடை பிடித்து தெற்கு வாசல் மீன் சந்தைக்குப் போயி அயிரையை கண்டு அப்படியே கண் குளிர ரசித்து விட்டு பின்னர் விலையை கேட்டால் கால்படி... அதாவது 375 கிராம் அயிரை மீன் 550 ரூபாய் என்று ஒரே போடாய் போட்டார் மீன் கடைக்காரர். காரணம் திருநெல்வேலி அயிரை என்பதால் இவ்வளவு விலையாம்.
உயிரோடு அயிரை மீன்கள்
அயிரையை உயிரோடு ஆசை தீர பார்த்த பின்னர் பணத்தைப் பற்றி கவலைப்படாலாமா? ஒரு அரைப்படி போடுப்பா என்று வாங்கிக்கொண்டு, கூடவே சின்ன சின்ன மிசையோடு துள்ளி விளையாடிய கெழுத்தி மீனையும் ஒரு கிலோ வாங்கிக்கொண்டு வந்து மாமியாரிடம் கொடுத்து சமைக்கச் சொன்னார் மாப்பிள்ளை. மாமியார் சமைக்கும் முன்பாக அயிரையை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

கல் உப்பு போட்டு
அயிரை மீன் உயிரோடு துள்ளி விளையாடும் போது அதை எப்படி கொல்ல முடியும்? இருக்கவே இருக்கு கல் உப்பு. ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து அயிரை மீன் உள்ள சட்டிக்குள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். 10 நிமிடத்தில் அத்தனை மீனும் கிரங்கிவிடும். நன்றாக உரசி கழுவி, நல்லெண்ணை ஊற்றி மூடி வைத்து விட்டால் சமைக்க தயாராகிவிடும் எதுவும் நீக்கத் தேவையில்லை. சிலர் தேங்காய் பால் ஊற்றி அயிரையை சாகடிப்பார்கள்.

அயிரைக்கு வரவேற்பு
ஆண்டுக்கு ஓரிரு முறை குளம், ஏரிகள் நிரம்பி மறுகால் பாயும்போது மட்டுமே கிடைப்பதால் பொதுமக்களிடையே அயிரை மீனுக்கு தனி வரவேற்புதான்.
சின்னச் சின்னதாய் சுண்டு விரல் அளவிற்கு காணப்படும் அயிரை மீன்களுக்கு, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் கடும் கிராக்கி ஏற்படும்.

மீன் பிரியர்கள் விருப்பம்
குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி வாய்க்காலில் தண்ணீர் மறுகால் பாயும் போது மட்டுமே அயிரை மீன்கள் உற்பத்தியாகும். தற்போது திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் நீர் நிலைகள் நீர் நிரம்பி மறுகால் பாய்வதால் அயிரை மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், மீன் சந்தைகளுக்கு அனைத்து வகை குளம், அணை மீன்கள் வந்தாலும், அரிதான அயிரைமீன்களை மீன் பிரியர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

சளி, இதய நோய்க்கு நல்ல மருந்து
அபூர்வமாக கிடைக்கும் மீன் என்பதால் அயிரை மீன்கள் 1 கிலோ ரூ.1500-க்கு விற்கப்படுகிறது. சளி தொந்தரவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அயிரை மீன் நல்ல மருந்தாக இருப் பதால் மார்க்கெட்டில் அயிரை மீனுக்கு கடும் வரவேற்பு உள்ளது.

விடிய விடிய காவல்
திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு அயிரை மீன்கள் விலை கிலோ ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரிச்சியூர், அங்காடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட அயிரை மீன்களை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்தாண்டு வரத்து குறைவால் அயிரை மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் கிலோ 800 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. சீசன் காலத்தில் மட்டுமே அயிரை மீன் கிடைக்கும் என்பதால் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்குகின்றனர் என்கின்றனர் கடைக்காரர்கள்.

அப்படியே சாப்பிடலாம்
கடந்த ஆண்டு 1 கிலோ அயிரைமீன் ரூ.1000 முதல் 1200 வரை விற்றது. தற்போது ரூ.1500 ரூபாய்வரை விற்கப்படுகிறது. இந்த மீன்களின் எந்த பகுதியையும் நீக்காமல் அப்படியே குழம்பு வைத்து சாப்பிடலாம். இதன் சுவைக்கு அடிமையாகதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

அயிரை மீன் குழம்பு ரெடி
அத்தை வைத்த அயிரை மீன் குழம்பு வாசம் மூக்கை துளைக்கவே வயிறு சாப்பிட வா வா என்று கூப்பிட்டது. நான் ருசித்த அயிரை மீன் குழம்பை நீங்களும் ருசிங்க.. போட்டோவில பார்த்து ரசித்து விட்டு உங்க கருத்தை சொல்லுங்களேன்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications