For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் மறியல்: வீரமணி, அய்யாக்கண்ணு, திருநாவுக்கரசர் கைது!

சென்னை எழும்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரி அனந்தன், தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை எழும்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரி அனந்தன், தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Ayyakkannu arrested in Chennai

விவசாயிகளின் கோரிக்கைகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு, மதுவிலக்கு, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இன்று காலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

இதில் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில் டெல்லியில் இருந்து இன்று காலை திரும்பிய அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஊர்வலமாக எழும்பூர் சென்றனர்.

அங்கு காங்கிரஸ், திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டத்தில் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அய்யாகண்ணு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திஉக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

English summary
Ayyakkannu, S.Thirunavukkarasar, Veeramani including 1000 more protested near Egmore Rayar Bridge are arrested by the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X