திமுகவில் மீண்டும் அழகிரியா? அது வதந்தி என்கிறார் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திராவிட முன்னேற்றக்கழகத்தில் மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீண்டும் அக்கட்சியில் இணைவார் என்றும் தலைவர் கருணாநிதிதான் இதற்கான வேலைகளை துவக்கியதாகவும் தகவல் வெளியானது. பிறந்தநாள் தினத்தன்று தனது அப்பாவின் ஆசியுடன் அழகிரி இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

கோபாலபுரத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் தனது பெற்றோர்களைக் கூட பார்க்காமல் மகன் வீடு உள்ள போயஸ்கார்டனிலேயே தங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. அது உண்மைதான் என்பது பேசிய அழகிரியும் சென்னையில் இருந்த போதும் பிறந்த நாளில் யாரையும் சந்திக்கப் போகவில்லை. நான், திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்தெல்லாம் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், வியாபார பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலி வாக்காளர் பட்டியல் பற்றி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கப் போவதாக தகவல் பரவுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தகவல்தானே பரவுகிறது? அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது எனவே இதுபற்றி கருத்து கூறவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஸ்டாலின் உறுதியாக சொல்லியிருப்பதைப் பார்த்தால் அறிவாலயத்தின் வாசல் அழகிரிக்கு இனி எப்போதும் திறக்காது போலிருக்கிறதோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications