செயற்குழு முடிவுக்காக காத்திருக்கும் அழகிரி.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் திமுகவினர்!
கட்சி தொடர்பான தனது முடிவை இன்னும் 2 நாளில் அறிவிப்பதாக முக அழகிரி கூறியிருப்பது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை இன்னும் 2 நாளில் அறிவிப்பதாக முக அழகிரி கூறியிருப்பது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போன்றே திமுகவிலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அழகிரி.
இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கட்சியில் எந்த தொடர்பும் இன்றி ஒதுங்கியே உள்ளார் அழகிரி. ஆனால் அவ்வப்போது ஸ்டாலின் குறித்தும் கட்சி நிர்வாகம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

அமைதியாக உள்ள ஸ்டாலின்
இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என எதிர்பார்க்கிறார் அழகிரி. ஆனால் அதற்கு கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் இதுவரை சமிக்ஞையும் காட்டவில்லை என தெரிகிறது.

எனக்கே ஆதரவு
இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு பிறகு நாளை திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நாளான இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி, திமுகவின் உண்மையான தொண்டர்களும் விசுவாசிகளும் எனக்குதான் ஆதரவாக உள்ளனர் என கெத்தாக பேட்டியளித்தார்.

இன்னும் 3 நாட்களில்
இதனை ஸ்டாலின் தரப்பு மிரட்டலாகவே பார்க்கிறது. இதைத்தொடர்ந்து கோபாலபுரம் சென்ற அழகிரி,தனது ஆதங்கத்தை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

செயற்குழு முடிவுக்காக வெய்ட்டிங்
அழகிரியின் மெரினா பேட்டி ஏற்கனவே கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது கோபாலபுரம் பேட்டி செயற்குழு கூட்ட முடிவுக்காக அவர் காத்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

அழகிரி முக்கிய அறிவிப்பு?
செயற்குழு முடிவை பொறுத்து அழகிரி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு அழகிரி செய்யும் ஒவ்வொரு செயலும் அவரது ஒவ்வொரு பேட்டியும் உற்று நோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications