For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடா... அழகிரி போட்டிருக்கும் கண்ணாடிக்கு பின் இப்படி ஒரு வரலாறா?

அப்பாவுடன் படத்திற்கு சென்றது, கேரம், கிரிக்கெட் விளையாடியது என கருணாநிதியுடன் சிறுவயதில் கழித்த நாட்களை பகிர்ந்துள்ளார் அழகிரி.

Google Oneindia Tamil News

சென்னை: அப்பாவுடன் படத்திற்கு சென்றது, கேரம், கிரிக்கெட் விளையாடியது என கருணாநிதியுடன் சிறுவயதில் கழித்த நாட்களை முன்னாள் மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ளார் அழகிரி.

2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாள் முதலே தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறார் அழகிரி.

அழகிரி என்ன பேசினாலும் வைரலாகி விடுகிறது. அழகிரி ஏதாவது பேச மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது.

நம்பிய அழகிரி

நம்பிய அழகிரி

காரணம் ஸ்டாலினுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல். கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் சேர்க்கப்படுவோம் என நம்பியிருந்தார் அழகிரி.

எண்ணமே இல்லை

எண்ணமே இல்லை

ஆனால் அவரது ஆசை நிராசையாய் போனது. ஸ்டாலினுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை எனத் தெரிகிறது.

சிறுவயது நினைவுகள்

சிறுவயது நினைவுகள்

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அழகிரி. அந்தப் பேட்டியில் ஸ்டாலினை விளாசிய கையோடு தனது சிறுவயது நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

சிறுபிள்ளைபோல் பங்கேற்பார்

சிறுபிள்ளைபோல் பங்கேற்பார்

அந்த பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, நாங்கள் சிறுவயதில் கேரம்போர்டு, கிரிக்கெட் போன்றவை விளையாடுவோம். அதில் அப்பாவும் சிறுபிள்ளைபோல் வந்து கலந்துகொள்வார்.

கண் திறந்தது

கண் திறந்தது

ஒருமுறை என்னையும், எனது அண்ணனையும் (மு.க.முத்து) அழைத்துக்கொண்டு திரைப்படத்திற்கு சென்றார். கண் திறந்தது என்ற படத்திற்கு சென்றோம்.

கண்ணை சுருக்கி

கண்ணை சுருக்கி

நான் அப்போது 8-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். கண்ணாடி அணியும் பழக்கம் அப்போது எனக்கு இல்லை. அதனால் படம் பார்க்கும்போது கண்ணை சுருக்கி சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கண்ணாடி போட்டுவிட்டார்

கண்ணாடி போட்டுவிட்டார்

அதை தந்தை கவனித்துவிட்டார். அடுத்தநாளே கண்மருத்துவரிடம் என்னை அழைத்துச்சென்று எனது கண்ணை பரிசோதித்து அப்பா கண்ணாடி பொருத்திவிட்டார்.

கண்ணாடியின் வரலாறு

கண்ணாடியின் வரலாறு

அப்போது எனக்கு நாங்கள் சென்ற படத்தின் தலைப்பு தான் நினைவிற்கு வந்தது. சென்ற படமும் கண் திறந்தது. அழகிரியின் கண்ணாடிக்கு பின்னர் இப்படி ஒரு கதை இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Azhagiri says the story behind his specs. Azhagiri given a interview to TV Channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X