அழகிரி விவகாரத்தில் செப்டம்பர் 30ம் தேதி நடக்கப் போவது என்ன?
நாமக்கல்: தி.மு.க.வில் ஏற்படபோகும் மாற்றங்கள் பற்றி தி.மு.க.வினரிடம் தான் கேட்க வேண்டும் எனத் தெரிவித்த மு.க.அழகிரி, எனது பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்க அனைவரும் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சர்க்கரை ஆலையில் உள்ள அண்ணா கலையரங்கில் தி.மு.க. பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமான முருகேசன் இல்ல திருமணம் இன்று காலை நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி கலந்து கொண்டார்.

மணமக்களை வாழ்த்திய அழகிரி, ‘முருகேசன் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றினார். அவரது இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அழகிரி. அப்போது, கருணாநிதி தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் விரைவில் திமுகவில் மாற்றங்கள் வரும் என அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அழகிரி, ‘இந்தக் கேள்வியை நீங்கள் தி.மு.க.வினரிடம் தான் கேட்க வேண்டும்' எனப் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘உங்கள் பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘நல்ல முடிவு கிடைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்' எனப் பதிலளித்தார் அழகிரி.
இத்திருமண விழாவில் மு.க.அழகிரியுடன் கே.பி.ராமலிங்கம் எம்.பி, மோகனூர் முன்னாள் சேர்மன் நவலடி உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications