வேலை கிடைக்க மாட்டேங்குதே: கவலையில் பி.எஸ்.சி. பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
சென்னை: குரோம்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள குரோம்பேட்டையில் இருக்கும் மும்மூர்த்தி நகர் 5வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் ஜெயலாபதியின் மகள் அஞ்சலி(20). பி.எஸ்.சி. படித்துள்ள அவர் தாம்பரம் சானிடோரியம் ஏற்றுமதி வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் 3 மாதம் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடியுள்ளார். பல இடங்களில் நேர்முகக்காணலுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காததால் அவர் மனமுடைந்து சோகமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்நேரம் அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்தபோது அஞ்சலி தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications