தமிழகத்தில் 3வது நாளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்! #banneet
நீட் தேர்விற்கு தடை விதிக்கக் கோரி 5வது நாளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதா உயிரிழப்புக்கு காரணமான நீட் தேர்வு காரணமாக இனியொரு ஏழை மாணவர் உயிரிழக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் கடந்த 3 நாட்களாகவே மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் .

இந்நிலையில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வி உரிமையை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போன்று நாமக்கல் அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வை தடை செய்வது மட்டுமே என்று மாணவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
Recommended Video

கடலூர் மாவட்டத்தில் கந்தசாமி கல்லூரி, கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் வருங்காலங்களில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பது சவாலாகிவிடும் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். கல்லூரியை விட்டு வெளியே வந்து போராடினால் அவர்களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரிலும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் அனிதாவின் படத்தை ஏந்தி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications