சம்மன் மெயிலில் தானே வந்திருக்கிறது, நேரில் வரும் போது பார்த்துக்கிறேன்... சசிகலாவின் அசால்ட் பதில்!
நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் சம்மன் மெயிலில் தானே வந்திருக்கிறது நேரில் வந்த பின் பார்த்துக் கொள்கிறேன் என்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

பெங்களூரு : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அனுப்பிய சம்மன் மெயிலில் தானே வந்திருக்கிறது, நேரில் வந்த பின் பார்த்துக் கொள்கிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். சம்மன் குறித்து சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் கூறியதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் மாதம் தொடங்கிய இந்த விசாரணையானது திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணனிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழு, கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி உள்ளிட்டோரிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார்.
இதே போன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, தீபக், ஜெ. தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோரிடம் விசாரணை ஆணையம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறு அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

விளக்கம் கேட்டு சம்மன்
இதனிடையே ஜெயலலிதாவின் சிகிக்சை காலம் முழுவதிலும் அவருடனேயே இருந்த சசிகலாவிடமும் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பிய 15 நாளில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மெயிலில் அனுப்பப்பட்ட சம்மன்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிற்கு ஈமெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர்.

நேரில் வரும்போது பார்ப்போம்
அதற்கு சசிகலா மெயிலில் தானே ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் நேரில் வந்த பின்னர் பார்த்துக் கொள்வேன் என்று அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.

என்ன செய்யப் போகிறது ஆணையம்?
இதனால் சசிகலா தரப்பில் இருந்து விசாரணைக் கமிஷனுக்கு பதில் அளிக்கப்படுமா. கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில் அவர் மீது என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது ஆணையம் என்று பல கேள்விகள் எழுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications