அக்.8 முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
சென்னை: வங்கிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக உள்ளன. இந்நிலையில் அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகளால் தொடர்ச்சியாக ஐந்து நாள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜையும், 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியும், 12-ம் தேதி புதன்கிழமை மொகரம் பண்டிகையும் வருகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாளாகும். 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறையாகும்.
இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதுடன், ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications