தபால் பைகளை எடுத்துச் செல்லும் "டர டர" டிராலிக்கு குட்பை.. மூடைகளை சுமக்கும் பேட்டரி வாகனங்கள்!
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தபால்துறையின் தபால் பைகளை சுமந்து செல்லும் டிராலிகளுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. மாறாக, புதிய பேட்டரி வாகனங்கள் அந்தப் பணியைச் செய்யத் தொடங்கியுள்ளன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் புதிய பேட்டரி வாகனங்களை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக வட்ட தபால் துறை தலைவர் டி.மூர்த்தி, முதுநிலை கோட்ட மேலாளர் (வணிகம்) ஜி.காயத்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்டிரல் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் தமிழகம் முழுவதும் இந்த பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளது தபால் துறை.

தபால் வார விழா
தமிழக தபால்துறையின் சார்பில் கொண்டாடப்பட்ட தபால் வார விழாவையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

2.5 லட்சம் பேர் வந்து போகும் சென்டிரல்
நிகழ்ச்சியில், பேட்டரி வாகனத்தின் முதல் இயக்கத்தைக் கொடியசைத்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்து பேசுகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நாள்தோறும் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தபால் பைகளால் டிராபிக் ஜாம்!
பயணிகள் நெரிசல் மிகுந்து காணப்படும் நேரங்களில், தபால் ஊழியர்கள் தள்ளுவண்டியில் தபால்களை எடுத்துச் செல்வதால், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்துகிறது.

பிளாட்பாரம் தேய்கிறது
தள்ளுவண்டியிலுள்ள இரும்புச் சக்கரங்களால், நடைமேடைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதோடு, அதிக சப்தம் ஏற்படுகிறது. ஆகையால், இரும்புச் சக்கரங்களுக்குப் பதிலாக ரப்பர் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, பேட்டரியில் இயங்கும் வண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒரு நாளைக்கு 24 லட்சம் தபால்கள்
தமிழக வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி பேசியபோது, தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் சுமார் 24 லட்சம் தபால்கள், 28 ஆயிரம் பார்சல்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

ரயில் மூலம்
இவற்றில் பெரும்பாலானவை ரயில் மூலமே அனுப்பப்படுகின்றன. தபால் வாரத்தின் ஒரு பகுதியாக, தமிழக தபால் வட்டம் சோதனை அடிப்படையில் பேட்டரியில் இயங்கும் வண்டியை அறிமுகம் செய்துள்ளது என்றார்.
தபால் பைகள் அடங்கிய டிராலிகளைத் தள்ளுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் கை வலி தற்போது மிச்சமாகியுள்ளது. எளிதான, யாருக்கும் தொல்லை தராத வகையில் பேட்டரி வாகனங்களை இயக்க முடிவதாக ஊழியர்களும் நிம்மதி தெரிவிக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications