வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பார் கவுன்சில் எச்சரிக்கை
சென்னை: நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அமல்படுத்திய சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் வரும் ஜூலை 25-ஆம் தேதி ஈடுபடப் போவதாக தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் வரும் 22-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால், போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் வக்கீல் தொழில் நடத்தவும் தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் வரும் 22-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications