என்ஜினீயரிங் விண்ணப்பங்களை 27ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை: என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடுவை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. முதலில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப் பட்டிருந்தது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என்ற நிலையில் இன்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பல்கலைக்கழகம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதன்படி, இம்மாதம் 27ம் தேதி வரையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 27ம் தேதி வரை விண்ணப்ப வினியோகமும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications