”திரையில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்”
சென்னை: திரையில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிம்பு, அனிருத் பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் இருவர் மீதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூரை சேர்ந்த பாலம்பாள் (வயது 60) சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார்.

பீப் பாடல்
பாலம்பாள் தனது மனுவில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.நடிகர் சிம்பு பாடிய ‘பீப்' என்று ஆபாச பாடல் வெளியானது குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் அதிகம் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, ‘பீப்' ஓசை மூலம் மறைக்கப்பட்ட வார்த்தை என்ன? என்பதை தெளிவாக குறிப்பிடாமலும், யார்? எந்த ஊரில் வைத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது? என்ற விவரங்கள் எதுவும் இல்லாமலும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிம்பு மீது காட்டிய வேகம்
சிம்பு மீது வழக்குப்பதிவு செய்ய வேகம் காட்டியதுபோல, ஊடகங்கள், திரைபடங்களில் பெண்களை அசிங்கமாகவும், அவதூறாகவும் பாடல் வரிகளில், வசனங்களில், காட்சிகளில் சித்தரிக்கப்படும்போது, வேகமாக போலீசார் வழக்குப்பதிவு செய்வார்களா? என்ற கேள்வி எழுகிறது.

பெண்களை ஆபாசமாக
உண்மையிலேயே பெண்களை ஆபாசமாக சித்தரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று போலீசார் நினைத்தால், பீப் பாடல்களுக்காக சிம்பு, அனிருத் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ததுபோல, பெண்களை எந்த வடிவில் ஆபாசமாக சித்தரித்தாலும் அதன்மீது வழக்குகளை பதிவு செய்யவேண்டும்.

தமிழக அரசுக்கு
எனவே, டி.வி., சேனல்கள், திரைபடங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் வரிகள், பாடல் நடனக்காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய உத்தரவிடவேண்டும். இதுதொடர்பாக 26-ந்தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் பாலாம்பாள் கூறியிருக்கிறார்.

விசாரணை
பாலம்பாள் தொடுத்துள்ள இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களை எச்சரிக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications