பீப் பாடல் சர்ச்சை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் மீதான மேலும் 2 வழக்குகள் வாபஸ்
சென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில், பெண்களை கேவலமாகவும், ஆபாசமாகவும் தனது இசை ஆல்பத்தில் பாடிய நடிகர் சிம்பு, அந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.

மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
23-வது கோர்ட்டில் பா.ம.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விருகம்பாக்கம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த லட்சுமணன் என்ற புதியவன், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிஸ்மி ஆகியோரும் வழக்குகள் தொடர்ந்தனர்.
கடந்த 28-ந் தேதி, 23-வது நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பாமக சார்பில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் திடீரென்று வாபஸ் பெற்றார். மற்ற 2 வழக்குகள் மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 9-வது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதேபோல் 23-வது நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி புதியவன் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளில் 3 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications