பீப் பாடல்... ஒயாத சர்ச்சை... பேசாம சிம்பு பேரை மாத்துங்களேன் டி.ஆர்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தையே மறக்கச் செய்துவிட்டது பீப் பாடல். கடந்த 25 நாட்களாக பீப்... பீப் என்று ஊதி தள்ளிவிட்டன ஊடகங்கள். சிம்புவை தனிப்படைகள் தேட... கனடாவிற்கு போன அனிருத் பாதுகாப்பாக அங்கேயே தங்கிவிட்டார். ஒருவழியாக சிம்புவிற்கு முன் ஜாமீன் கிடைக்கவே மீண்டும் ஊடகங்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் டி.ராஜேந்தர்.
தன் மகன் தப்பு எதுவும் செய்யவேயில்லை என்று தொடங்கி தர்மம், நியாயம் வென்றது என்று கூறி கடையில் பத்தாம் இடத்து குரு தனது மகனை பாடாய் படுத்தி விட்டது என்று கூறிய அவர் தர்மம் வென்றுள்ளது என்று கூறிவிட்டார்.
சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது. பால்ய பருவத்தில் இருந்தே சிம்பு மீதான வம்பு தும்புகள் அதிகம். யுடுயூபில் தொடங்கிய வம்பு, நயன்தாராவின் முத்தச்சர்சையில் உச்சத்தை தொட்டது. இதனாலேயே ஆளை விடுடா சாமி என்று சிம்புவை விட்டு ஓடியே போனார் நயன்தாரா. அதன் பிறகு ஹன்சிகா உடனான காதலை பகிரங்கப்படுத்தவும் போட்டோக்களை கசிய விட்டார் சிம்பு.
இணையத்தில் தன்னுடைய செய்திகளை தானே கசிய விட்டு தனக்குத் தானே பப்ளிகுட்டி தேடிக்கொள்வது ஒன்றும் சிம்புவிற்கு புதிதில்லை. அதேபோலத்தான் தங்கமகனை அடித்து வீழ்த்த தானாக பீப் பாடலை கசிய விட்டாரா? அல்லது டி.ராஜேந்தர் சொன்னது போல பீப் பாடல் விஷமிகளால் கசிய விடப்பட்டதா எல்லாம் வல்ல அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

வெள்ளத்தை மறைத்த பீப் பாடல்
கடந்த டிசம்பர் 10ம் தேதி தொடங்கி பீப் பீப் என்று சிம்பு, அனிருத்தை அடித்து ஆடிய ஊடகங்கள் கேமராவும், கையுமாக டி.ராஜேந்தரின் வீட்டு வாசலில் தவமிருந்தனர். இதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கூட மறக்கடிக்கப்பட்டனர். ஒரு பெரிய தப்பை மறக்க அதை விட பெரிய தப்பா செய்யணும் என்கிற லாஜிக் இங்கே சரியாகிப் போனது.

தெனாவெட்டு சிம்பு
இது என் பாடல்தான்... நான் எனக்காக எழுதி பாடியது. நான் யாருக்காகவும் வெளியிடவில்லை. நான் யாருடைய படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கலையே என்கிற ரீதியில் தெனாவெட்டாக டுவிட்டரில் சிம்பு பதிவிட பற்றிக்கொண்டது பரபரப்பு. மகளிரணி தொடங்கி அரசியல் கட்சியினர் வரை சிம்புவை விட்டு வைக்கவில்லை. மாறி மாறி வழக்கு போட சம்மன் பறந்தது.

தமிழ்நாட்டை விட்டு போறோம்
டி.ராஜேந்தர் ஒருபக்கம் குறள் டிவி மூலம் விளக்கம் அளிக்க அது எல்லாம் செல்லாது செல்லாது மன்னிப்பு கேட்கணும் என்றனர் போராட்டக்காரர்கள். டிவிகளில் ஒரு பக்கம் விவாதம் நடக்க வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவலானார்கள் சிம்புவும் அனிருத்தும். இதைப்பார்த்த சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், என்னதான் வேணும் உங்களுக்கு... என் மகன் உயிர் வேணுமா? என்று கேட்டார். அதோடு நாங்கள் தமிழ்நாட்டை விட்டே போகிறோம் என்று கூறி கண்ணீர் விட்டார்.

சிறப்பு யாகம்
தன் மகன் மீதான வழக்குகளில் ஒரு முடிவு கிடைக்க வழக்கறுத்தீஸ்வரரை சரணடைந்தார் டி.ராஜேந்தர். ஒருவழியாக உயர்நீதிமன்றம் சிம்புவிற்கு முன் ஜாமீன் அளித்து உத்தவிட்டது. இதற்காக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார் டி.ராஜேந்தர். சிம்பு மீது கோவையில் தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. முதல் தகவல் அறிக்கையிலும் முகாந்திரம் இல்லை. அந்த பாடலை சிம்பு இணையதளத்தில் வெளியிடவில்லை. அதை அவர் சினிமாவில் பாடவில்லை, டி.வி.யில் பாடவில்லை, மேடையில் பாடவில்லை. ஒலிப்பதிவுக்கூடத்திலும் பாடவில்லை என்று பழைய பல்லவியை பாடினார்.

என் புகாருக்கு நடவடிக்கையில்லை
அவர் அறையில் பாடப்பட்டு, பிறகு வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட பாடல். அதை யாரோ ஒருவர் திருடி வெளியிட்டு இருக்கிறார். அந்த நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் புகார் கொடுத்திருந்தேன். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேறொருவர் கொடுத்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்கள். எனவே, நான் சிம்புக்கு முன்ஜாமீன் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்தேன்.

சாதாரண பெட்டி கேஸ் தான்
இது ஒரு சாதாரண பெட்டி கேஸ் . காவலில் வைத்து விசாரிக்கவேண்டிய வழக்கே அல்ல. ஜாமீனில் விடக்கூடிய வழக்கு என்று நீதிபதி கூறிவிட்டார். ஆனால் தனிப்படை அமைத்து தேடுகிறது என்று கூறி தினம் தினம் பில்டப் கொடுத்து செய்தி வெளியிட்டு எல்லோரையும் பரபரப்பாக்கிவிட்டனர்.
கெட்ட வார்த்தையை எழுத முடியலையே
ஆபாசம் என்பது வேறு கெட்ட வார்த்தை என்பது வேறு... என்ன கெட்ட வார்த்தை பயன்படுத்தினார் என்பதைக் கூட பெட்டிசனில் எழுத முடியவில்லை. எனவேதான் என்மகனுக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இது எனது வேண்டுதலுக்கு கிடைத்த வெற்றி.

கடவுள் காப்பாற்றிவிட்டார்
நான் காஞ்சீபுரம் சென்று 3 கோவில்களில் சாமி கும்பிட்டேன். யாகம் வளர்த்தேன். பின்னர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கும் சென்றேன். அத்தனை பிரார்த்தனைகளுக்கும், கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி இது.

வழக்கை வாபஸ் பெற்றவர்களுக்கு நன்றி
என் பேட்டியையும், என் மனைவியின் பேட்டியையும் பார்த்துவிட்டு, வழக்குகளை வாபஸ் பெற்ற டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி. இந்த வழக்குகள் வாபஸ் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்ட லட்சிய தி.மு.க தொண்டர்கள், சிம்புவின் ரசிகர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்தில் குரு பாடாய் படுத்தும்
பொதுவாகவே பத்தில் குரு வந்தால் அதுவரையிலும் தனக்கிருந்த கம்பீரமும், கௌரவமும் குறையும். எந்தப் பதவியிலிருந்தாலும் கௌரவத்தை சிதைத்து வதந்திகளில் சிக்கிக் கொள்ள வைக்கும். இவர்களுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மேன்மையான உயர்பதவிகளைக் கொடுத்து தரத்தை குறைத்து வைப்பார்கள். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கியபடி இருக்கும்.

தர்மம் வென்றது
இப்படித்தான் என் மகனுக்கும் நேர்ந்துள்ளது என்று ஒரே போடாக போட்ட டி.ராஜேந்தர் யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது என்று கூறி முடித்தார்.

சிம்புவின் பேரை மாற்றுவாரா டி.ஆர்
நியூமராலஜி படி அடிக்கடி பேரை மாற்றம் செய்யும் டி.ராஜேந்தர் பேசாமல் தன்னுடைய மகனுக்கும் நல்ல பேராக மாற்றலாமே அந்த புண்ணியத்திலாவது கெட்டது நடக்காமல் இருக்கும், காதல் வெற்றி பெறுவதோடு திருமணமும் கைகூடி வரும். ஒன் இந்தியா வாசகர்களே நல்ல பேராக சிம்புவுக்கு வைக்கலாமே.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications