சிம்பு தலைமறைவாகத் தான் இருக்கிறார்..சென்னை காவல்துறை திட்டவட்டம்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தலைமறைவாகத் தான் இருக்கிறார் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தப் பாடல் விவகாரத்தில் சிம்பு தலைமறைவாகிவிட்டார் என்றும் அதனால் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து இருப்பதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த குற்றச்சாட்டை மறுத்து சிம்பு எங்கும் தலைமறைவாக இல்லை. அவர் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவை விட்டும் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்.

இந்த விவகாரத்தை அவர் சட்டப்படி எதிர்கொள்வார் என்று பேட்டியளித்து இருந்தார். தற்போது இதனை சென்னை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
சிம்பு எங்கும் தப்பிச்செல்லவில்லை எனில் அவர் நேரடியாக காவல்துறையினரிடம் வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டியது தானே.அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை.
நாங்கள் தேடுவது தெரிந்தும் அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அவர் இல்லை.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்த வழக்கில் அவர் தலைமறைவாகத் தான் இருக்கிறார் என்று அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் சிம்புவை தேட தனிப்படைகள் அமைத்து இருப்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
சிம்பு முன்ஜாமீன் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications