திருப்பூரில் பரபரப்பு... ஓடும் ரயிலில் 2 பிச்சைக்காரர்கள் மோதல்... கத்திக்குத்து... ஒருவர் கைது!
திருப்பூர்: ஓடும் ரயிலில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் மற்றொருவரை மார்பில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் கோவை விரைவு ரயில், நேற்று மாலை ஒரு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. திருப்பூர் அருகே வந்தபோது, ரயிலில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து ரயில் திருப்பூரில் நின்றதும், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், அதற்கு முன்னதாகவே ரயிலில் இருந்து இறங்கிய பிச்சைக்காரர்கள் இருவரும், நடைபாதையில் நின்றபடி ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைகாரரின் மார்பில் சிறிய வகை கத்தியால் குத்தியுள்ளார். ஆனால், மார்பில் ரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
விரைந்து செயல்பட்ட போலீசார், காயமடைந்த பிச்சைக்காரரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு பிச்சைக்காரரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவரின் பெயர் முருகேசன் (30) என்றும், கத்தியால் குத்தியவர் பெயர் ராஜேஷ் (35) என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முருகேசன் நேற்றிரவே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷிடம் ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் பிச்சைக்காரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட திடீர் சண்டை மற்றும் கத்திக்குத்து சம்பவங்களால் அங்கிருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications