ஆட்சி இருப்பதால் தான் அதிமுக உயிரோடு இருக்கிறது : டி.டி.வி தினகரன்
ஆட்சி இருப்பதால் தான் அதிமுக உயிரோடு இருக்கிறது என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக இன்னமும் உயிரோடு இருக்கிறது. ஆட்சி கலைந்தால் எல்லோரும் எங்களிடம்தான் வருவார்கள் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழக அரசு மக்களை அனைத்து விஷயத்திலும் துன்புறுத்தி வருகிறது.

சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக, இதுவரை மக்களிடம் எந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதை தொடர்ந்து அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அமமுக சார்பில் 6ம் தேதி திருவண்ணாமலையிலும், 9ம் தேதி அரூரிலும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், போலீஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
நீதிமன்றம் சென்று அதற்காக அனுமதியை வாங்கி வருவோம். நிச்சயம் சேலம் சென்னை பசுமைவழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடக்கும். தமிழக அரசு மக்களுக்கு தொடர்ந்து பிரச்னைகளை மட்டுமே கொடுத்து வருகிறது.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 90% பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக உயிரோடு இருக்கிறது. ஆட்சி முடிந்ததும் அனைவரும் எங்களிடம்தான் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications