நீங்க காங்கிரசின் பினாமியா? திமுக மீது வெங்கய்ய நாயுடு கடும் பாய்ச்சல்
தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியதற்கு வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடக்கிறது என்று சொன்ன ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் வறட்சி நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது. ஆய்வு செய்த அந்தக் குழு மத்திய அரசுக்கு அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதியை ஒதுக்கி அறிவித்தது.
பயிர்க் கடனை மாநில அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது விவசாயிகளின் பிரச்சனைக்கு என்ன செய்தது.

மோடியின் பினாமி ஆட்சி
சமூக பொருளாதார வேற்றுமையை நீக்க மோடி முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறார். ஆனால் தமிழ் நாட்டில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் முன்பு தமிழகத்தில் திமுக ஆண்ட போது காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்பட்டதா?

அனைத்துக் கட்சிக் கூட்டம்
திமுக இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதிமுகவும் பாஜகவும் இல்லாத கூட்டம் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டமாகும்? விவசாயிகள் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்.

தலையீடு
தமிழ்நாட்டில் அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் பிரச்சனைகளில் மத்திய அரசின் தலையீடு இல்லை. மாநிலத்தில் நிலையான அரசு வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, நல்லாட்சி நடக்க வேண்டும் என்று மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.

ஆதாயம் இல்லை
தமிழக மக்களுக்கு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை அதிமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும். அதனை செய்ய வேண்டும். அதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழகம் முன்னேற வேண்டுமானால் நிலையான ஆட்சி இங்கே இருக்க வேண்டும். இங்கு நடக்கும் பிரச்சனையால் பாஜகவிற்கு எந்தவித ஆதாயமும் கிடையாது என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications