குலுங்கி குலுங்கி அழுத விஜயகாந்த்.. யாரு கண்ணு பட்டுச்சோ.. "உன்னத நட்பில்" கசிந்த சீக்ரெட்..என்னவாம்
சென்னை: விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் நட்பு பற்றின தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.. இதுகுறித்து முக்கிய ரகசியம் ஒன்றும் வெளியாகி உள்ளது.
விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் இருவரின் நட்பினை தமிழகம் அறிந்தது.. ஸ்கூல் படிக்கும்போதிருந்தே, இருவரும் ஒன்றாய் இணைந்து அலைந்து, திரிந்து, விளையாடி என இவர்கள் 2 பேரின் செருப்பும், மதுரையின் வீதிகளில் ஒன்றாக தேய்ந்தன.
அந்த அளவுக்கு விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்தவர்தான் இப்ராகிம் ராவுத்தர். மதுரையில் தொடங்கிய நட்பு, சென்னையில் சினிமா வாய்ப்பை தேடும்வரை தொடர்ந்து, இருவரும் வெற்றி மகுடம் சூட்டும்வரை தொடர்ந்தது..
படக்கம்பெனி முதல் எந்த இடத்துக்கு போவதென்றாலும் 2 பேருமே சேர்ந்துதான் போவார்கள். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பக்கபலமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர்... அதை எப்பவுமே விஜயகாந்த் மறக்காமல் பதிவு செய்து கொண்டே வந்ததை மறுக்க முடியாது.

நார்மல் வெஜ் மீல்ஸ்: ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் 2 பேரும் சென்னைக்கு வந்த புதிதில், தி-நகர் ரோகிணி லாட்ஜுலதான் தங்கியிருந்துள்ளனர்.. அப்போது, அவர்களது சாப்பாடுகூட, நார்மல் வெஜ் மீல்ஸ் தானாம்.. அதுவும் ஒரேயொரு மீல்ஸ் வாங்கி, அதில் தண்ணீர் ஊற்றி, மூணு வேளைக்கும் ரெண்டுபேரும் பகிர்ந்துகிட்டு சாப்பிடுவார்களாம்.. யாராவது அவர்களை சந்திக்க வந்தால்மட்டும், மாமிச உணவை சாப்பிடுவார்களாம்.. ஆனால், விஜயகாந்த் திருமணத்துக்கு பிறகு இவர்கள் 2 பேருக்கும் பிரிவு வந்ததாக தகவல்கள் கசிந்தன..
விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டபிறகு, ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டுவிட்டதாகவும், இதற்கு பிரேமலதாதான் காரணம் என்றும், கடைசி காலத்தில் ராவுத்தரை விஜயகாந்த் கண்டுகொள்ளவேயில்லை என்றும், இந்த மன வருத்தத்தில்தான் மோசமான உடல்நிலை பாதிப்புக்கு விஜயகாந்த் ஆளாகிவிட்டதாகவும் சமூகவலைதளங்களிலும், சினிமா வட்டாரத்திலும் எந்நேரமும் ஒரு பேச்சு வலம்வந்து கொண்டேயிருக்கும்.. எனினும், இவர்களின் பிரிவு ஏன் ஏற்பட்டது? தனிப்பட்ட காரணமா? அல்லது அரசியல் காரணமா? என்றெல்லாம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.
யார் காரணம்: இந்நிலையில், வலைப்பேச்சு ஆனந்தன் தன்னுடைய சேனலில், விஜயகாந்த் - ராவுத்தர் நட்பு பற்றியும், பிரிவுக்கான காரணம் குறித்தும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.. விஜயகாந்த்தின் தற்போதைய உடல்நல பாதிப்புக்கு காரணம், அவரது முந்தைய பழக்கவழக்கங்கள்தான் என்கிறார் ஆனந்தன். விஜயகாந்த்துக்கு திருமணம் ஆனதுமே, அனைத்தும் பிரேமலதாவின் கன்ட்ரோலில் சென்றுவிட்டதாம்..

கதறி அழுத விஜயகாந்த்: அதற்கு முன்புவரை விஜயகாந்த்தின் படங்களுக்கு தேதி பேசுவது, கால்ஷீட் தருவது, சம்பளம் பேசுவது என எல்லாமே ராவுத்தர்தான் செய்து கொண்டிருந்தாராம்.. அதுமட்டுமல்ல, அந்த பணத்தை எதிலெல்லாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றிகூட ராவுத்தர்தான் முடிவு எடுப்பாராம்.. திருமணம் முடிந்த பிறகுதான், இதெல்லாம் தடைபட்டுள்ளது.. இதற்கான காரணத்தை இருவருமே சொல்லவில்லை என்றாலும், திருமணத்துக்கு பிறகு ராவுத்தரை முறையாக அழைத்து, அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை விஜயகாந்த் பிரித்து தந்து விட்டாராம்..
எனினும், நண்பனை பிரிந்துவிட்டோமே என்று ஆழ்மனதில் விஜயகாந்த் எப்போதுமே கலங்கி கொண்டே இருந்ததாகவும், அதனால்தான், ராவுத்தரின் இறுதிசடங்கில், விஜயகாந்த் கதறி கதறி அழுததாகவும், இவர்கள் 2 பேரின் நட்பை பற்றியும் சிலாகித்து பேசியுள்ளார் ஆனந்தன். இந்த வீடியோவை தேமுதிக தொண்டர்கள் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications