ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சென்னை மண்டல பி.எஃப். ஆணையர் கைது
சென்னை: ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சென்னை மண்டல பி.எஃப். ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையராக இருப்பவர் துர்கா பிரசாத். இவர், வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க சென்னையில் உள்ள சவீதா கல்விக் குழும நிர்வாகத்திடம் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சிபிஐ அதிகாரிகள் குழு,பி.எஃப். ஆணையரக அதிகாரி துர்கா பிரசாத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் துர்கா பிரசாத் சென்ற வாகனத்தை மறித்து சோதனையிட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் ரூபாய் 15 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து துர்கா பிரசாத் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 அதிகாரிகள், ஓட்டுநர் ஒருவர் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற சவீதா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த 3 பேரையும், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications