காவி நிறத்தில் கலாம் சிலை அமைக்கத் தமிழக அரசுதான் காரணம்.. சீமான் ஆவேசம்
அப்துல் கலாம் நினைவிடத்தில் காவி நிறத்தில் சிலை, பகவத் கீதை அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசு உடந்தை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை மற்றும் பகவத் கீதை ஆகியவை காவி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசு சார்பில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தைப் பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார்.

அங்கு, அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பகவத் கீதையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மத்தியில் ஆட்சி நடத்தி வருவதால் இஸ்லாமியரான அப்துல் கலாம் அருகில் பகவத் கீதை வைத்திருப்பதும், காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது, சீமான், அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்தில் அனைத்து மத நூல்களையும் வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், காவி நிறத்தில் கலாம் சிலை அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருந்துள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications