பரணியை விட கஞ்சா கறுப்பு கேவலமானவரா.. அடங்காமல் பேசும் காயத்ரி ரகுராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசி வருகிறார். பரணி மீது அபாண்ட பழி சுமத்தி வெளியேற்றப்பட்ட நிலையில் பரணி கேவலமானவர் என காயத்ரி பேசியிருப்பது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசி எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியை நிறுத்தக்கோரியும் இதனை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக்கோரியும் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பொறாமைப்படும் காயத்ரி

பொறாமைப்படும் காயத்ரி

குறிப்பாக ஓவியா அதிக வாக்குகளை பெறுவது காயத்ரி ரகுராமுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய எபிசோடில் எதை வைத்து மக்கள் ஓட்டு போடுகின்றனர் என் கேள்வி எழுப்பிய காயத்ரி, நடிப்பவர்களுக்குதான் ஓட்டுப் போடுகிறார்கள் என்ற பாணியில் பேசினார்.

பரணியை விட கேவலமானவரா?

பரணியை விட கேவலமானவரா?

அதற்கு பதிலளித்த ஓவியா நாம் நாமளாக இருந்தால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்றார். அதனை ஏற்க மறுத்த காயத்ரி அப்போது பரணியை விட கஞ்சா கறுப்பு கேவலமானவரா என கேட்டார்.

அடங்காத காயத்ரி

அடங்காத காயத்ரி

தொடர்ந்து அதே கேள்வியை பலமுறை திருப்பி திருப்பிப் கேட்டார். அந்த வார்த்தையை சொல்ல வேண்டாம் என ஓவியா கூறியும் அடங்காமல் காயத்ரி திமிர்தனமாக பரணியை கேவலமானவர் என கூறிக்கொண்டே இருந்தார்.

Bigg Boss Tamil is banned? Petition Filed against Vijay TV-Oneindia Tamil
பரணியை வெளியேற்றிய டீம்

பரணியை வெளியேற்றிய டீம்

கடந்த வாரம் மக்கள் ஓட்டால் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கும் வாய்ப்பை பெற்றார் பரணி. ஆனால் கஞ்சாகறுப்பு வெளியேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர்கள் பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதையடுத்து சுவர் ஏறி குதித்து பரணி வெளியேற முயன்றதால், விதிகளை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார்.

சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

ஏற்கனவே ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார் காயத்ரி ரகுராம். தற்போது நிகழ்ச்சியில் இல்லாத பரணியையும் அவர் வம்புக்கு இழுத்திருப்பது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gayathri Raguram using harsh words on Bharani. Gayathri says bharani is a worst person in the biggboss program.
Please Wait while comments are loading...