பாரத் பந்த்: புதுவையில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் அடியோடு நிறுத்தம்- கடைகள் அனைத்தும் மூடல்!
புதுவை: அகில இந்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுவையில் அனைத்து தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிரதான கடை வீதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுவை அரசு பேருந்துகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.
புதுவை முத்தியால்பேட்டையில் இன்று காலை இயக்கப்பட்ட ஒன்றிரண்டு தனியார் பேருந்துகள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து புதுவைக்கு வரவேண்டிய காய்கறி லாரிகளும் இன்று வந்துசேரவில்லை. மேலும் புதுவையில் பிரதான கடைவீதிகளில் உள்ள கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக புதுவையே வெறிச்சோடி காணப்படுகிறது. இன்றைய வேலைநிறுத்தத்தால் புதுவையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications