பாரத் பந்திற்கு நன்றி, பெங்களூரில் டிராபிக்கே இல்லை: ட்வீட்டிய மக்கள்
சென்னை: மக்கள் பொது வேலைநிறுத்தத்தை பற்றி பேசுவதால் பாரத் பந்த் என்ற வார்த்தை ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல போக்குவரத்து சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் ட்விட்டரில் வேலைநிறுத்தம் பற்றி பேசுவதால் Bharat Bandh என்ற வார்த்தை டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
பொது வேலைநிறுத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான ட்வீட்டுகள்,
|
பந்த்
பாரத் பந்த் என்பதை ட்விட்டரில் மட்டுமே நான் பார்க்கிறேன்! மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவை தவிர பிற மக்களுக்கு இன்று பந்த் என்பதே தெரியவில்லை என நினைக்கிறேன் என்று ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்துள்ளார்.
|
புனே
புனேவில் பாரத் பந்தால் எந்த பாதிப்பையும் நான் பார்க்கவில்லை. வாழ்க்கை வழக்கமாகத் தான் உள்ளது என்று அபிஜித் தெரிவித்துள்ளார்.
|
பெங்களூர்
பாரத் பந்திற்கு நன்றி. பெங்களூரில் டிராபிக்கே இல்லை. அதனால் தான் வழக்கத்தை விட இன்று விரைவில் அலுவலகத்தை அடைந்தேன். ஆட்டோவில் என்கிறார் ஷிவ்.

இந்தியா
இந்தியாவின் மறுபெயர் என்ன? சாதாரண மக்கள்: பாரத், இடதுசாரிகள்: பாரத் பந்த் என வில்லயர்ஸ் என்பவர் கிண்டல் செய்துள்ளார்.
|
தீபாவளி
ஹோலி, தீபாவளி, ஈத் தவிர ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் முக்கிய திருவிழா எது தெரியுமா? பாரத் பந்த் என ஆயுஷி ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications