என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியல... பாரதிராஜா உருக்கம்
என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என இயக்குநர் பாரதி ராஜா உருக்கமாக தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என இயக்குநர் பாரதிராஜா அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. உடல்நலத்தில் அக்கறை கொண்டவரான ஸ்ரீதேவி இறந்தது அதுவும் மாரடைப்பில் இறந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீதேவி இன்று நம்மிடம் இல்லை
இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா கூறுகையில் , இந்திய சினிமாவுக்கு ஸ்ரீதேவியின் மறைவு இழப்பாகும். 55 வயதிலும் பிரமாண்டமாக நடித்த ஸ்ரீதேவி இன்று நம்மிடம் இல்லை.

9 மொழிகளை பேசும் திறன்
ஸ்ரீதேவியை இந்தியில் அறிமுகம் செய்தது நான்தான். நடிப்பை என்னிடம் கற்றுக் கொண்டதாக ஸ்ரீதேவி கூறியிருந்தார். எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்காத பெண், 9 மொழிகளை பேசும் திறனைப் பெற்றவர். இது கடவுள் கொடுத்த பொக்கிஷம்.

50 ஆண்டுகள் கொடி கட்டி
கலை உலகின் ராணியாக திகழ்ந்தவர். என் மயில் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கலையுலகில் 40, 50 ஆண்டுகாலமாக கொடி கட்டி பறந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இன்று வரை தனது கிரீடத்தை இறக்கவே இல்லை.

இன்று நம்மிடம் இல்லை
இறக்கும் வயதா என்று தோன்றுகிறது. 50 வயதிலும் பிரம்மாண்டமாக நடித்து தனது ஆற்றலை நிரூபித்த ஸ்ரீதேவி இன்று நம்மிடையே இல்லை என்கிறபோது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

மயில் கதாபாத்திரம்
16 வயதினிலே படத்துக்கு 16 வயதில் ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தவர்தான் ஸ்ரீதேவி.அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கனவு கதாபாத்திரமான மயில் கதாபாத்திரத்தை முழுமைப்படுத்தியவர். மயிலின் பெயரை அவரது பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.

புது படத்தில் நடிக்க வைப்பதாக இருந்தேன்
கதையே கேட்காமல் சிகப்பு ரோஜாக்கள் படத்தை நடிக்க ஒப்புக் கொண்டார். இப்போது என் மயிலு இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியை வைத்து அவர் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இருந்தேன். போனி கபூருக்கும் அவரது இரு குழந்தைகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்றார் பாரதிராஜா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications