பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எல்லாருமே நாமினேட்டட்! நிகழ்ச்சிக்கு முழுக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் நாமினேட் செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையான பேச்சு, புறம் பேசாமை, நேர்மையான நடத்தை உள்ளிட்டவை மூலம் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ஓவியா. இதனால் பொறாமை கொண்ட குடும்பத்தினர் வாரா வாரம் அவரது பேரை நாமினேட் செய்து வெளியேற்ற திட்டமிட்டனர்.

ஆனால் மக்களின் செல்வாக்கால் பிக்பாஸ் வீட்டிலேயே தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஓவியா. இதனால் எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிய ஜூலி, காயத்ரி உள்ளிட்டோர் ஓவியாவை ஒதுக்கி வைத்தனர்.

ஓவியா வெளியேற்றம்

ஓவியா வெளியேற்றம்

இந்நிலையில் தான் நம்பிய ஜூலி செய்த துரோகம் ஆரவ்வால் வந்த ஏமாற்றம் உள்ளிட்டவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளான ஓவியா தற்கொலைக்கு முயன்ற ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

விரட்டப்பட்ட ஜூலி

விரட்டப்பட்ட ஜூலி

இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொய், நாடகம், பித்தலாட்டம் மூலம் நாட்களை நகர்த்தி வந்த ஜூலியையும் மக்கள் வாக்களிக்கமால் பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்கள் விரட்டினர். இதனால் ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அனைவரும் நாமினேட்டட்

அனைவரும் நாமினேட்டட்

வாராவாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் 3 பேரை சக குடும்ப உறுப்பினர்கள் மூலம் நாமினேட் செய்து வந்தார் பிக்பாஸ். இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பிக்பாஸே நாமினேட் செய்துள்ளார்.

போட்டியாளர்களுக்கு தண்டனையா?

போட்டியாளர்களுக்கு தண்டனையா?

ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில் பிக்பாஸ் அனைவரையும் நாமினேட் செய்துள்ளார். ஓவியாவுக்கு நேர்ந்த துரோகத்தால், சக போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் இதுபோன்ற தண்டனையை அறிவித்துள்ளாரா அல்லது மக்களிடையே பிக்பாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களில் யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை கண்டறிய பிக்பாஸ் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

Bigg Boss Tamil, Gayathri and Juliana are giving troubles to Oviya-Filmibeat Tamil
பிக்பாஸ்க்கு மூடு விழா?

பிக்பாஸ்க்கு மூடு விழா?

ஆனால் ஓவியா வெளியேற்றத்தால் இழந்த ரசிகர்களை தக்க வைக்க இதுபோன்ற நடவடிக்கையில் இந்த முடிவை பிக்பாஸ் அறிவித்தாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்யக்கோரி ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விரைவில் மூடு விழா நடத்த இந்த முடிவா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Biggboss naminated all the contestants in the biggboss house. This raising questiones that biggboss going to end.
Please Wait while comments are loading...